நிரந்தர விலை குறைப்புடன் Mi ஏ3: எவ்வளவு தெரியுமா??
வெள்ளி, 24 ஜனவரி 2020 (14:38 IST)
சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஸ்மார்ட்போன் மீது நிரந்தர விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Mi ஏ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆனது. இந்நிலையில் தற்போது ஸ்மார்ட்போனின் விலையில் ரூ. 1000 நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் Mi ஏ3 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி ரூ. 11,999-க்கும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ரூ. 14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.