உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமான சூழலில் தங்கம் விலை கிடுகிடுவென ஏற தொடங்கியது. கடந்த வாரம் ரூ.32 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328 க்கு விற்பனை ஆகி வந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.32,784 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,098 ரூபாயாக உள்ளது.