Long Lasting பேட்டரி: ஆன்லைன் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி M21!
திங்கள், 23 மார்ச் 2020 (15:32 IST)
அதிக பேட்டரி திறன் கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த வருடத்தின் துவக்கம் முதலே சாம்சங் நிறுவனம் அடுத்தடுத்த பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனது.
மிட்நைட் பிளாக் மற்றும் ராவென் பிளாக் நிறங்களில் அறிமுகம் ஆகியுள்ள சாம்சங் கேலக்ஸி M21 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இன்று முதல் அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் துவங்கியுள்ளது.