ஜியோ இலவச சேவை இம்மாதத்துடன் முடிவடையும் நிலையில் கட்டண சேவை குறித்து ஜியோ நிறுவனம் ஏற்கனவே அறிவிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ப்ரைம் திட்டத்தில் வாடிக்கையாளர்களாக இணைபவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ப்ரைம் அல்லாது ஜியோ சேவையை தொடங்கும் வாடிக்கையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதில் உள்ள் சிக்கல் என்னவென்றால் நீங்கள் செய்த ரிசார்ஜ் வேலிடிட்டி முடிந்த பின் உடனடியாக அடுத்த ரிசார்ஜ் செய்து சேவையை தொடர வேண்டும். கால தாமதம் செய்தால் ஜியோ எண் துண்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஒரு ரிசார்ஜ் முடிந்து அடுத்த ரிசார்ஜ் செய்வதற்கான கால அவகாசம் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் எண் துண்டிக்கப்படலாம்.