ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரவுகளை வழங்கி வருகிறது.
தற்போது ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகளுக்குள் மேலும் பல சலுகைகளை கூட்டி உள்ளது.
ஜியோ ஃபை 4ஜி ரூட்டர் கருவியை வாங்கி வாடிக்கையாளர்கள் ப்ரைம் ரீசார்ஜ் மற்றும் முதல் மாதம் ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் அதற்கு கூடுதல் டேட்டாவை வழங்கிவருகிறது ஜியோ.
# ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. புதிய ஜியோ ஃபை வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா உடன் கூடுதலாக அடுத்த 12 மாதங்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
# ரூ.309-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு தினசரி 1 ஜிபி என்ற விகிதத்தில் 28 ஜிபி வழங்கப்பட்டது. தற்போது புதிய ஜியோ ஃபை வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு 168 ஜிபியை வழங்குகிறது.
# ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி என்ற விகிதத்தில் 28 ஜிபி வழங்கப்பட்டது. புதிய ஜியோ ஃபை வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களுக்கு 224 ஜிபியை வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.