கடன் பிரச்சனை காரணமாக ஆர்காம் சொத்துகளை விற்க, குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு ஆர்காம் சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை துவங்கியது. அந்த ஏலத்தில் வயர்லெஸ் ஸ்பெக்ட்ரம், டவர், பைபர் உள்ளிட்ட சொத்துகளை ஜியோ வாங்கியது.
தற்போது, ஏலத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஆர்காம் ஏலத்தில் விட உள்ளது. இதையும் ஜியோ வாங்க இருப்பதாக தெரிகிறது. ஆனால், போட்டியே இல்லாமல் இருந்த ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல் இதில் நுழைந்துள்ளது.