1000 ஜிபி கூடுதல் டேட்டா: ஏர்டெல் சலுகையை பெறுவது எப்படி??
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (16:25 IST)
தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் அதிக டேட்டாவை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் தனது புதிய 6 திட்டத்தின் மூலம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
ரூ.599, ரூ.699, ரூ.849, ரூ.999, ரூ.1199 மற்றும் ரூ.1599 விலையில் புதிய திட்டங்களில் 1000 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இது ப்ராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் டேட்டாவிற்கான வேலிடிட்டி மார்ச் 31, 2018 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற முடியும்.
இந்த சலுகை பற்றிய மேலும் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் www.airtel.in/broadband என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
ஏர்டெல் சலுகையை பெறுவது எப்படி?
# www.airtel.in/broadband என்ற தளத்திற்கு சென்று ஆறு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
# பின்னர், புதிய பிராட்பேண்ட் இணைப்பை பெற மொபைல் நம்பர் மற்றும் வீட்டு முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
# வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டும் புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் சேவைகளை பெற முடியும்.
# தேர்வு செய்த திட்டத்தில் டேட்டா வழங்கப்படும். கூடுதல் டேட்டா பிக்பைட் டேட்டாவின் கீழ் வழங்கப்படும்.
# பயன்படுத்தாத பிக்பைட் டேட்டா அடுத்த மாத கணக்கில் சேர்க்கப்படும்.