மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு பத்து நிமிடக் கதைகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறும்படப் போட்டியில் பங்கு பெற்ற படங்கள் இதில் இடம் பெறுகின்றன.
இப்போது முதல் சுற்று, இரண்டாம் சுற்றைக் கடந்து மூன்றாம் சுற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்தச் சுற்றுதான் ஒரு லட்ச ரூபாய் பரிசு வெல்லப் போகும் படங்களை நிர்ணயிக்கப் போகிறது.
இந்த பத்து நிமிடக் கதைகள் போட்டிக்கு வந்தவை மொத்தம் 490 படங்கள். இதில் ஒளிபரப்புக்கு தேர்வு செய்த படங்கள் மொத்தம் 200. இந்தப் படங்களில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு தேர்வான படங்கள் மொத்தம் 45. இந்தப் படங்களை திரை வல்லுநர்கள் மட்டுமின்றி, மக்கள் தொலைக்காட்சி நேயர்களும் குறுஞ்செய்தி மூலம் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர்.
இந்த 45 படங்களிலிருந்து ஒரு லட்ச ரூபாய் பரிசு வெல்லப்போகும் படங்கள் எவை என்பதை வரும் புதன்கிழமை மக்கள் தொலைக்காட்சியில் தெரிந்து கொள்ளலாம்.