ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் திரும்பி பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பங்கேற்கிறார்.
திரைத் துறை நட்சத்திரங்களை பேட்டி எடுத்து அவர்களது பழைய கால நினைவுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு நிகழ்ச்சிதான் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியாகும். திரையில் பதிவான விஷயங்களை விட, திரைக்குப் பின்னால் நடந்த பல சுவாஸ்யமான நிகழ்ச்சிகளை இந்த திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் இந்த வாரம் திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியருமான கங்கை அமரனின் திரையுலக நினைவுகள் ஒளிபரப்பாகிறது.
இவர் முதலில் இசையமைத்த படம் `விடுகதை ஒரு தொடர்கதை'. இவர் இயக்கிய முதல் படம் - கோழி கூவுது. தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளை செய்த கரகாட்டக்காரன் இவரின் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் கங்கை அமரன் தான் கடந்து வந்த திரையுலக பயணத்தை பற்றியும், சக கலைஞர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.