ஜெயா டி‌வி‌யி‌ல் அருள் நேரம்

திங்கள், 22 பிப்ரவரி 2010 (18:12 IST)
புக‌ழ்பெ‌ற்ற கோ‌யி‌ல்களை ‌வீ‌ட்டி‌ன் வரவே‌ற்பரை‌யி‌ல் உ‌ள்ள தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ன் மூல‌ம் நமது க‌ண்களு‌க்கு ‌விரு‌ந்து படை‌த்து வரு‌கிறது ஜெயா டி‌வி‌யி‌ல் ‌தினமு‌ம் காலை 6 ம‌ணி‌க்கு ஒ‌ளிபர‌ப்பா‌கி வரு‌ம் அரு‌ள் நேர‌ம்.

ஆ‌ன்‌மீக ‌நி‌க‌ழ்‌ச்‌சியான இ‌ந்த அரு‌ள் நேர‌ம் ‌ப‌க்‌தி‌த் தொடர் இதுவரை 3500 வார‌ங்களை‌ எட்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை எழுதி இயக்கிவரும் கலைமாமணி ஸ்ரீகவி, இதற்காக புகழ்பெற்ற திருக்கோவில்களுக்கு நேரடியாகச் சென்று அந்தக் கோவில்களின் தலவரலாற்றை அவரே தொகு‌த்து வழங்கி வருகிறார்.

இந்த வகையில் ஒளிபரப்பான 3500 நாட்களுமே இந்த நிகழ்ச்சியில் தனது கணீர் குரலில் இவரே பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3500 தொட‌ர்களு‌க்காக இவர் 2500 திருத்தலங்களுக்கு தன் பக்திப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அதிலும் திருப்பதியில் மட்டும் 10 பிரமோத்சவ நிகழ்ச்சிகள், 30 நேரடி ஒளிபரப்புகள், திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹாரம், பிள்ளையார்பட்டி பிள்ளையார், குருபகவான், ஸ்ரீரங்கம், திருநள்ளாறு என புகழ் பெற்ற கோவில்களை ந‌ம் க‌ண் மு‌ன் கொ‌ண்டு வ‌ந்து‌ள்ளா‌ர் இவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்