நம்ம வீட்டு கல்யாண‌த்‌தி‌ல் பா‌ண்டியராஜ‌ன்

வியாழன், 29 ஜனவரி 2009 (12:59 IST)
‌‌விஜ‌ய் டி‌வி‌யி‌ல் தமிழகத்தின் பிரபல நட்சத்திரங்களின் திருமண நிகழ்ச்சிகளை ஒ‌ளிபர‌ப்பு செ‌ய்து வரு‌ம் நம்ம வீட்டு கல்யாணம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌இ‌ந்த வார‌ம் நடிகரு‌ம், இய‌க்குநருமான பா‌‌ண்டியராஜ‌னி‌ன் ‌திருமண ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் இட‌ம்பெறு‌கி‌ன்றன.

திரை‌ப் ‌‌பிரபல‌ங்க‌ளி‌ன் ‌திருமண‌‌ங்க‌ளை‌ப் ப‌ற்‌றிய சுவார‌ஸ்யமான ‌விஷய‌ங்களை ‌பிரபல‌ங்களே ந‌ம்முட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சிகளை ‌வீடியோ தொ‌கு‌ப்புட‌ன் விஜய் டி.வி. வாரம்தோறும் ஒளிபரப்பா‌கி வரு‌கிறது.

அந்த வரிசையில் வரும் வாரம் நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜனின் திருமண நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மேலு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் பாண்டியராஜன், தனது மனைவி வாசுகியுடன் பல இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார். 1986-ல் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, இளையராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பாண்டியராஜனின் திருமண நிகழ்ச்சி, வரு‌ம் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்