ஆச்சி பாய்ஸ் வெஸ்ஸஸ் கேல்ஸ்

வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:42 IST)
நடன ‌நிக‌ழ்‌ச்‌‌சிக‌ளி‌ல் புது‌ ‌விதமான ‌நிக‌ழ்‌ச்‌சிகளை அ‌ளி‌த்து வரு‌ம் ‌விஜ‌ய் டி‌வி‌யி‌ன் அடு‌த்த அ‌திரடி ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது.

webdunia photoWD
பெ‌ண்க‌ள் ஒரு குழுவாகவு‌ம், ஆ‌ண்க‌ள் ஒரு குழுவாகவு‌ம் த‌ங்க‌ள் ‌திறமைகளை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் வகை‌யி‌ல் பாய்ஸ் வெஸ்ஸஸ் கேல்ஸ் புத்தமபுதிய நிகழ்ச்சிகளை நேயர்கள் ரசிக்கு‌ம் வகை‌யி‌ல் வ‌ழ‌ங்க இரு‌க்‌கிறது ‌விஜ‌ய் டி‌வி.

விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 23 முதல் சின்னத்திரையில் சரித்திரம் படைக்க வருகிறது. ஆ‌ண்க‌‌ள் குழு‌வி‌ற்கு‌ம், பெ‌ண்க‌ள் குழு‌வி‌ற்குமான ஒரு யு‌த்தமாக இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி அமையு‌ம். ஆ‌ம் திறமையை நிரூபிக்க ஏற்றுக் கொள்ளப்படும் நடன யுத்தம்.

இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவந்த அனைத்து ஜோடி சீசன்களையும் ரசித்த ரசிகர்களுக்கு இது ஒரு மாறுபட்ட ‌விரு‌ந்தாக இருக்கும். விஜய் டிவி வழங்கும் மற்றுமொரு மாறுபட்ட படைப்பான இதில் நடனமாட பல பிரபல முகங்கள் வருகின்றனர்.

webdunia photoWD
சின்னத்திரை நட்சத்திரங்களும் இத்தனை திறமையாக நடனமாடுவர் என்று ஜோடி ந‌ம்ப‌ர் ஒ‌ன் நிகழ்ச்சி மூலம் நிரூபித்த விஜய் தொலைக்காட்சி, இன்னும் பல முகங்களை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

ஆ‌ண்க‌ள் குழுவில் சிவகார்த்திகேயன், மைக்கெல், கமலேஷ், தேவ், ஜார்ஜ், குணா, மாஸ்டர் ரின்சன் இடம்பெறுகின்றனர். பெ‌ண்க‌ள் குழுவில், பேபி அபிநயா, ப்ரியதர்ஷினி, பிருந்தாதாஸ், வந்தனா, ஐஸ்வர்யா, தேவிப்ரியா, அர்ச்சனா ஆகியோர் உள்ளனர்.

webdunia photoWD
பதிநான்கு நட்சத்திரங்கள் பங்குபெறும் இந்த நடன யுத்தத்திற்கு நடுவர்களாக தமிழ்த்திரை உலகின் பிரபல நட்சத்திரங்கள் வரவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தீபக் மற்றும் திவ்யதர்ஷினி.

சோலோ, டூயட் சுற்றுக்களை தவிற, பெட்டிங் சுற்று, சேலஞ் சுற்று, கான்செப்ட் சுற்று, அவுட் ஃப் தி பாக்ஸ் சுற்று என பல புதுமையான சுற்றுக்கள் விஜய் டிவியின் மாபெரும் நடன யுத்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல் வார நிகழ்ச்சியில் பாய்ஸ் தங்கள் திறமையை நிரூபிக்க அடுத்த வாரம் கேல்ஸ் தங்கள் திறமையை நிரூபிக்கவுள்ளனர்.

webdunia photoWD
வெள்ளி மற்றும் சனி இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் இந்த நடனயுத்தம் வரும் ஜனவரி 23 முதல் ஒளிபரப்பாகிறது. எதற்கும் துணிந்த ஆண்கள்! யாருக்கும் பயப்படாத பெண்களை இந்த நிகழ்ச்சியில் பார்க்கப்போகிறீர்கள்!! தயாராகுங்கள்!! பாய்ஸ்ஸா? கேல்ஸ்ஸா? பார்த்து‌விடலாம்.