உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று வந்திருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த முறை வில்லு ஸ்பெஷல் என்ற தீம் அளிக்கப்பட்டது.
webdunia photo
WD
11 போட்டியாளர்கள் உள்ள இந்த நடனப் புயலுக்கான தேடல் நிகழ்ச்சியில், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நடிகரும், இயக்குநரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவே நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.
வில்லு படத்தில் உள்ள பாடல்களுக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியாளர்கள் பிரபுதேவாவின் முன்னிலையில் நடனமாடி அசத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குநனர்களான ஷோபி, தினேஷ், பாஸ்கர், அஷோக் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இவர்கள் அனைவருமே வில்லு திரைப்படத்தின் நடன இயக்குநர்கள் என்பது இந்த நிகழ்ச்சிக்கு இன்னும் மெருகேற்றியது.
இந்த நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.