சூப்பர் சிங்கரில் அரிய வாய்ப்பு

சனி, 3 ஜனவரி 2009 (12:48 IST)
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முன்னணிப் பாடகர்கள் சித்ரா, மனோவுடன் ஜோடி சேர்ந்து பாடும் வாய்ப்பைப் பெறுகிறார்கள் போட்டியாளர்கள்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.

டூயட், பிறமொழிப் பாடல் என பல புதுமையான சுற்றுகள் முடிவடைந்திருந்த இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது புதுமையான ஒரு போட்டி நடைபெறுகிறது.

webdunia photoWD
பிரபல பின்னணிப் பாடகர்கள் சித்ரா, மனோவுடன் ஜோடி சேர்ந்து பாட போட்டியாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. 8 போட்டியாளர்களும் இதற்கு ஆயத்தமாகிவிட்டனர்.

பாடகி சுஜாதாவும், பாடகர் ஸ்ரீநிவாசும் நடுவர்களாக உள்ளனர்.

இந்த சுற்றிலும் எலிமினேஷன் இருப்பதால் போட்டியாளர்களுக்குக் கொஞ்சம் டென்ஷன். மனோ, சித்ரா இருவருக்கும் பிடித்த பாடகருக்கு சிறப்புப் பரிசு உண்டு.

சுவாரஸ்யமான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஜனவரி 5, 6, 7 அதாவது திங்கள் முதல் புதன் வரை இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் பார்க்கலாம்.