விஜய் டிவியின் நம்ம வீட்டு கல்யாணம்

சனி, 6 டிசம்பர் 2008 (12:33 IST)
ம‌க்க‌ள் ‌மிக ந‌ன்கு ‌‌அ‌றி‌ந்த பிரபல‌ங்க‌ளி‌ன் ‌திருமண ‌நிக‌ழ்‌ச்‌சி ப‌ற்‌றிய ‌விவ‌ர‌ங்களை அ‌ளி‌க்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி ந‌ம்ம ‌வீ‌ட்டு க‌ல்யாண‌ம். இது விஜய் டிவியின் மற்றுமொரு புத்தம் புதிய படைப்பு.

விஜய் டிவி நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை மிக வித்யாசமாக வழங்க வருகின்றது. பிரபலங்கள் தங்கள் வீட்டு திருமணத்திற்கு நேயர்களை அன்புடன் அழைக்கின்றனர்.

பிரபல நட்சத்திரங்களில் திருமணங்கள் எப்படி நடைபெற்றது அதற்கான முன்னேற்பாடுகள், அவை நடந்த முறை, சாஸ்த்திர சம்பிரதாயங்கள் முதல், திருமணத்திற்கு பிறகு நடக்கும் சம்பிரதாயங்கள் என அனைத்து நிகழ்வுகளையும் நேயர்களுக்காக பிரத்யேகமாக சேகரித்து வழங்குகின்றது விஜய் டிவி.

திருமணம் பற்றி மணமகன் - மணமகள் மற்றுமல்லாது அவர்களின் பெற்றோர், உற்றார் உறவினர்கள், நன்பர்கள் என அனைவரும் பகிர்ந்துகொள்ள வருகின்றனர்.

திருமண பந்தத்தில் அவர்களை அடைவது என்ன? என்னென்ன முறன்பாடுகள் அவை ஏற்படுத்தியுள்ளது, நண்பர்கள், சகோதர சகோதரிகளின் தொடர்புகள் வலுவாகியுள்ளதா, அல்லது அதற்கெல்லாம் நேரமில்லாமல் போனதா என ஒவ்வொரு பிரபல திருமண ஜோடிகளும் இதில் பகிர்ந்துகொள்ள வருகின்றனர்.

திருமண ஏற்பாடுகளில் நடக்கும் 'குளறுபடிகள்' முதல், விளையாட்டு வைபவங்கள், நகைச்சுவை நிகழ்வுகள், மறக்க முடியாத அனுபவங்கள், இன்றைக்கு நினைத்தாலும் சிரிக்கக் கூடிய விஷயங்கள், மாப்பிள்ளையின் அசடு வழிதல், திருட்டுத் தனமாக மணப்பெண்ணை சந்தித்த மாப்பிள்ளையின் அனுபவங்கள் என ஏராளமான தங்களது அனுபவங்களை இந்த பிரபல நட்சத்திரங்கள் மனம் திறந்து பேச வருகின்றனர்.

இந்த பிரபல நட்சத்திரங்களின் திருமண வைபவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அவற்றை தொகுத்து நேயர்களுக்காக வழங்குவதுடன், அந்தந்த நட்சத்திரங்களே அதைப்பற்றி சொன்னால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சிந்தித்து அதை நடைமுறைப்படுத்துகிறது விஜய் டிவி.

பிரபல ஜோடிகளான பூர்ணிமா-பாக்யராஜ் முதல், பா. விஜய், நடிகர் நரேன், அருண்விஜய், மனோஜ், இசையமைப்பாளர் இமான் மற்றும் பலர் தங்களது காதல் திருமணங்கள் பற்றியும், பெரியோர் நிச்சயித்த திருமணம் பற்றியும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வருகின்றனர்.

இ‌ன்று முத‌ல் (டிசம்பர் 06, சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு இந்நிகழ்ச்சி துவங்‌கி தொட‌ர்‌ந்து ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்