இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
இன்று சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார்.
உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ஆண்கள் கறுப்பு சட்டை பேண்ட்டும், பெண்கள் கறுப்பு சேலை அல்லது சுடிதாரும் அணிந்து இருந்தனர்.