ஜோடி ந‌ம்ப‌ர் திருமண விழா ஸ்பெஷல்

மகிழ்ச்சி பொங்கும் தருணங்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது திருமணமும் கொண்டாட்டமும் தான். நேயர்களின் நெஞ்சத்தை கொல்லை அடித்த விஜய் டிவியின் கார்னியர் ஃபுருட்டிஸ் ஜோடி No.1 சீசன் 3ல் இந்த வாரம் நடன ஜோடிகள் திருமண சுற்றுக்கு நடனமாட உள்ளனர்.

திருமணம் என்றால் மகிழ்ச்சி, கொண்டாட்டம், குதூகலம் என சந்தோஷத்துக்கு குறைவில்லாமல், சொந்தங்கள் எல்லோரும் ஒன்று கூடி உறவாடும் ஒரு இனிய தருணம் எனலாம்.

ஜோடிகளான, டிங்கு / சந்தோஷி, சஞ்சய் / பூஜா, மைக்கெல் / ஹேமா, ராஜேஷ் / சுகாசினி மற்றும் நேத்ரன் / அருணா தேவி இந்த திருமண சுற்றுக்கு கடும் போட்டியிடுகின்றனர்.

webdunia photoWD
திருமண சுற்று என்பதால் விழாக் கோலம் பூண்டிருக்கிறது ஜோடியின் அரங்கம். இதோடு ஒவ்வொரு ஜோடியின் நடனத்தின் போதும், அவர்களின் நண்பர்களோ, உறவினர்களோ அல்லது சென்ற சீசன்களிலிருந்து ஆடிய ஜோடிகள் என யாரேனும் வந்து ஒரு சிறப்பாக நடனமாடிய இணையையு‌ம் தே‌ர்வு செ‌ய்து தர வேண்டும் என்பதே இந்த சுற்றின் விதி முறையாகும். எந்த ஜோடிகளுக்கு யார் சிறப்பு அ‌ந்த ப‌ட்ட‌த்தை தர உள்ளனர் என்பதை வரும் வாரம் விஜய் டிவியின் கார்னியர் ஃபுருட்டிஸ் ஜோடி No.1 சீசன் 3ல் கண்டு மகிழலாம்.

ஜோடிகளோடு சிறப்பு விருந்தினர்களாக 'சரோஜா' படக் குழுவினரான வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சிவா மற்றும் வைபவ் ஆகியோர் பங்குபெறுகின்றனர். இவர்களின் சிறப்பு நடனுமும் இந்த வாரம் இடம்பெறும் ஜோடி No.1 நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும்.

வரும் வெள்ளி - சனி, (அக்டோபர் 10, 11, 2008) இரவு 8 மணிக்கு விஜய் டிவியின் கார்னியர் ஃபுருட்டிஸ் ஜோடி No.1 சீசன் 3 நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்!