அம்பிகாவின் சின்னத்திரை பிரவேசம்

திரைப்பட நடிகை அம்பிகா தொடர் ஒன்றில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார்.

பல முன்னணி நடிகைகள் சின்னத்திரைக்கு வந்துவிட்டனர். கமல், ரஜினி, சத்யராஜ் உள்ளிட்டோருடன் கதாநாயகியாக நடித்த அம்பிகா, பின்னர் அம்மா, அக்கா வேடங்களில் நடித்தார்.

உடல் பருமன் காரணமாக சில ஆண்டுகள் நடிப்புக்கு இடைவெளி விட்ட அம்பிகா அமெரிக்காவில் வசித்து வந்தார்.

கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ள அம்பிகா முன்னணித் தொலைக்காட்சி ஒன்றின் தொடரில் கதாநாயகியாக சின்னத்திரைக்கு பிரவேசம் செய்யவிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்