இளம் பெண்களுக்கு, அவர்களது புத்திசாலித்தனத்தை சோதிக்கும் வகையில் 20-20 எனும் ஒரு புதிய நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
20-20 என்றதும் ஏதோ விளையாட்டு என்று நினைக்க வேண்டாம். இது ஒரு அறிவுசார்ந்த நிகழ்ச்சி.
முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய ஒரு எளிமையான பொது அறிவுப் போட்டி.
ஒரே நேரத்தில் 20 பெண்கள் பங்கேற்க முடியும். ஆனால் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். அப்படி வெற்றி பெறுபவருக்கு 1 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் வெல்ல வாய்ப்பு உண்டு.
இந்த நிகழ்ச்சியை அனு ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.