வெள்ளித்திரை ப‌ற்‌றிய அலச‌ல்

பெ‌ரிய ‌திரை‌க்கு வரு‌ம் புதிய திரைப்படங்களை நேயர்களே தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு‌ விமர்சிக்கும் புதிய நிகழ்ச்சி வெள்ளித்திரை.

மெகா டிவியில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பா‌கிறது இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி.

இந்த நிகழ்ச்சியில் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ள திரைப்படங்களைப் பற்றி நேயர்கள் நேரடியாக தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தொலைபேசி வழியாக பரிமாறிக் கொள்ளலா‌ம்.

பிடி‌த்தது, ‌பிடி‌க்காதது, ர‌சி‌த்தது, முக‌ம் சு‌ழி‌த்தது போ‌ன்ற எதையு‌ம் கூறலா‌ம்.

தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ள்ளு‌ம் நேய‌ர்க‌ள், புதிய திரைப்படங்களை திரையரங்கிற்குச் சென்று பார்த்த பின்பு அந்த படத்தில் அவர்களுக்கு பிடித்த காட்சிகள், பாடல்கள், விரும்பாத காட்சிகள், படத்திற்கு பொருந்திய, பொருந்தாத காட்சிகள், படத்தின் கிளைமாக்ஸ் குறித்து விரிவாக விமர்சனம் செய்கின்றனர்.

மேலும் படத்தின் கதை அமைப்பு மற்றும் முடிவு காட்சிகள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று திரை உலகினருக்கு தமது கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்