புதிய நடுவர்களுடன் களமிறங்குகிறது ஜோடி No.1 சீசன் 3
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (13:01 IST)
webdunia photo
WD
ஜோடி No.1 நடன நிகழ்ச்சி, பிரம்மாண்டமாக கடந்த ஜூலை முதல் விஜய் டிவியில் துவங்கியது. 8 பிரபல சின்னத்திரை ஜோடிகளான வெங்கட்-நிஷா, கலைசெல்வன் டிங்கு - சந்தோஷி, சரத் சந்திரா - ப்ரீத்தி, மஹேந்திரன் - ஹேமா, நேத்ரன் - அருணா தேவி, சஞ்செய் - பூஜா, பூஜா - ரவீந்திரன் மற்றும் சுகாசினி - ராஜேஷ் ஆகியோர் தங்கள் நடனத்திறமையை நிரூபிக்க களமிறங்கினர்.
சென்ற வாரம் முதல் சுற்று என்பதால், ஜோடிகளுக்கு பிடித்த நடனமுறையை கையாண்டனர் ஜோடிகள். அவர்கள் ஃபோல்க் ஸ்டைல் நடனம் தமிழ்நாட்டிற்கே பிடித்த நடனமுறை என்பதால் கார்னியர் புரூட்டிஸ் ஜோடி No.1 சீசன் 3யின் முதல் தகுதி சுற்றும் இதே ஸ்டைலில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia photo
WD
கோலாகலத்துடன் துவங்கிய இந்த மூன்றாவது சீசனின் நடுவர்களும் சிறப்பம்சம் வாய்ந்தவர்கள். R.B.சவுத்ரியின் மகனான ஜீவா, சீசன் 3யின் ஒரு நடுவர். இவரின் ராம், ஈ, டிஷ்யும், பொறி, கற்றது தமிழ் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள இளம் கதாநாயகர். இவரோடு இணைந்து சீசன் 3க்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தயாராகிவிட்டார்.
இந்த சீசனின் சூப்பர் நடுவர்களான நடிகர் ஜீவா, ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோருடன் ஆரம்பமாகிறது கார்னியர் புரூட்டிஸ் ஜோடி No.1 சீசன் 3யின் முதல் தகுதி சுற்று.
webdunia photo
WD
இதில் எந்த ஜோடி நீக்கப்பட உள்ளனர், எந்த ஜோடி சிறந்த ஜோடிகளுக்கான விருது வாங்க உள்ளனர், புதிய நடுவர்களின் கருத்துக்கள், தீபக்கின் அழகிய தொகுப்போடு வருகிறது கார்னியர் ஃபுரூட்டிஸ் ஜோடி No.1 சீசன் 3ஐ.
வாரந்தோறும் வெள்ளி - சனிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.