‌சி‌‌ன்ன‌த்‌திரை‌க்கு குடியேறு‌ம் ச‌ங்க‌வி

திங்கள், 28 ஜூலை 2008 (12:48 IST)
விஜ‌‌ய், அ‌ஜீ‌த் போ‌ன்ற நடிக‌ர்களுட‌ன் ஜோடி சே‌ர்‌ந்து நடி‌த்தவ‌ர் நடிகை சங்கவி த‌ற்போது ‌சி‌ன்ன‌த்‌திரை‌க்கு குடியே‌றியு‌ள்ளா‌ர்.

அண்ணாமலை, சித்தி போன்ற தொடர்கள் மூலம் புகழ் பெற்ற சி.ஜே. பாஸ்கர் இயக்கத்தில் "கோகுலத்தில் சீதை'' என்கிற நெடுஞ்தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் விரைவில் ஒளி பரப்பாக உள்ளது.

இ‌ந்த தொடரில் நடிகை சங்கவி கதாநாயகியாக நடிக்கிறார். ர‌ம்யா ‌கிரு‌ஷ‌்ணனை‌த் தொட‌ர்‌ந்து ‌சி‌ன்ன‌த்‌திரை‌க்கு வ‌ந்து‌ள்ளா‌ர் ச‌ங்க‌வி.

கலைஞர் தொலைக் காட்சியில் "கல்யாணப் பரிசு'' தொடரை தயாரித்து வழங்கும் ஸ்ரீதன் மீடியா பூபதி இத்தொடரையும் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்