ரசிக‌ர்க‌ள் ப‌ங்கே‌ற்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி

சனி, 12 ஜூலை 2008 (12:10 IST)
கலைஞ‌ர் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ள பு‌‌திய ‌நிக‌‌ழ்‌ச்‌சி ர‌‌சிக‌ன் எ‌ன்பதாகு‌ம்.

த‌மி‌‌ழ் ‌திரை‌ப்பட நட்சத்திரங்களின் ரசிகர்கள் பங்கேற்கும் ரசிகன் என்ற நிகழ்ச்சியை தயாரித்திருக்கிறது கிராவடி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்.

த‌மி‌ழ் ‌‌திரை‌ப்பட உல‌கி‌ல் இரு‌க்கு‌ம் ந‌ட்ச‌த்‌திர‌ங்களு‌க்கு எ‌ன்று பல ர‌சிக‌ர்க‌ள் இரு‌‌க்‌கி‌‌ன்றன‌ர். அவ‌ர்க‌ள் ர‌சிக ம‌ன்ற‌ங்க‌ளு‌ம், ந‌ற்ப‌ணி ம‌‌ன்ற‌ங்களு‌ம் அமை‌த்து ப‌ல்வேறு ப‌ணிகளையு‌ம் செ‌ய்‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் அவ‌ர்க‌ளி‌ன் ம‌ற்றொரு ப‌ரிணாம‌த்தை வெ‌ளி‌ப்படு‌த்துவதே இ‌ந்த ர‌சிக‌ன் ‌நிக‌‌ழ்‌ச்‌சியாகு‌ம்.

இந்த ரசிகன் நிகழ்ச்சியில் முதல்கட்டமாகப் பங்கேற்பவர்கள் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள். தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இருந்து இவர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் 13‌ம் தே‌தியான ஞா‌‌யி‌ற்று‌க் ‌கிழமை முத‌ல் ஞாயிறு தோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத். இயக்குநர் ஆர்செல் ஆறுமுகம்.

ரசிகர்கள் சாதாரணமானவர்கள் என்ற நிலையை மாற்றி அவர்களும் இந்த சமுதாயத்திற்கு பயன்தரும் வகையில் பல நற்பணிகளை செய்து வருவதுடன், அவர்களுக்குள்ளும் மறைந்திருக்கும் படைப்பாற்றல், கலைத்திறன் மற்றும் ஆளுமைத்திறனை வெளிக்கொண்டு வருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அணிக்கு 3 பேர் கொண்ட நான்கு அணிகள் இடம் பெறும்.

நிகழ்ச்சியில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒருவர் நேரிடையாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மதிப்பிடுபவராகவும், மற்றொருவர் வீடியோ மூலம் பொது நலன் சார்ந்து கேள்வி எழுப்புவராகவும் இடம் பெறுவார்கள்.

வெற்றி பெறும் அணிகளை வைத்து இறுதி நிகழ்ச்சியை நடத்தி அதில் ஒரு அணியை சிறந்த அணியாக தேர்வு செய்கிறார்கள்.

தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் உள்ளிட்ட தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களின் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்