விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடருக்காக புதுமுகங்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் தொகுப்பு கனவுகள் காணும் வயசாச்சு நிகழ்ச்சியாக 14ஆம் தேதி முதல் வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
பள்ளிப் பருவத்தின் துள்ளித்திரியும் காலத்தை மிகவும் அழகாக எடுத்துச் சொல்லும் கனா காணும் காலங்கள் தொடரில் 11ம் வகுப்பு படிக்கும் ராக்கி, கிரண், பிரியா, மிண்டு ஆகியோர் 12ஆம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றுவிட்டனர்.
எனவே 11ஆம் வகுப்பில் படிக்கும் புதிய முகங்களை தேடும் படலம் சென்னை மற்றும் மதுரையில் நடந்தேரியது.
சென்னையில் 22 பேரும், மதுரையில் 23 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் வாரம் கோவையில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கோவையில் வசிப்பவர்கள் மட்டுமே பங்குபெறலாம். நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நடிப்புப் பயிற்சி பட்டரைக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்த நேர்முகத் தேர்வின் தொகுப்புகள் கனவுகள் காணும் வயசாச்சு என்ற நிகழ்ச்சியாக விஜய் டிவியில் வரும் ஜூலை 14ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது-
இவர்களின் நடிப்புத் திறனை தேர்வு செய்ய பல சின்னத்திரை பிரபலங்கள் வர உள்ளனர். நடிகை சுஹாசினி முக்கிய நடுவராக பங்கேற்கிறார்.