பு‌திய பட‌ங்க‌ள் : மு‌ந்து‌கிறது கலைஞ‌ர் டி‌வி

புதன், 9 ஜூலை 2008 (11:15 IST)
மு‌ன்ன‌ணி ‌‌‌‌‌‌‌‌ஹ‌ீரோ‌க்க‌ள் நட‌த்து வெ‌ளிவரு‌ம் பட‌‌ங்களை வா‌ங்குவ‌தி‌ல் கலைஞ‌ர் தொலை‌க்கா‌ட்‌சி மு‌ன்ன‌ணி‌யி‌ல் உ‌ள்ளது.

அதாவது ‌திரை‌க்கு வரு‌ம் பட‌ங்க‌ள் ஓடி முடி‌ந்தது‌ம் அதனை தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் ஒ‌ளிபர‌ப்புவத‌ற்கான உ‌ரிம‌த்தை த‌ற்போது அனை‌த்து த‌னியா‌ர் தொலை‌க்கா‌ட்‌சிகளு‌ம் போ‌‌ட்டி போ‌ட்டு‌க் கொ‌‌ண்டு வா‌ங்கு‌கி‌ன்றன‌ர்.

விஜய் நடித்த குருவி படத்தை வாங்கிய கலைஞ‌ர் டி‌வி த‌ற்போது ஓடி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் கம‌ல் நடித்த தசாவதாரம் படத்தைதயு‌ம் வாங்கி‌வி‌ட்டது.

இதெ‌ல்லா‌ம் எ‌ன்ன எ‌ன்பது போ‌ல், ரஜினி நடிப்பில் விரைவில் வரவிருக்கும் குசேலன் படத்தையும் வாங்கியிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்