பொ‌திகை‌யி‌ல் ‌வினா‌-‌விடை ‌நிக‌ழ்‌ச்‌சி

புதன், 9 ஜூலை 2008 (11:12 IST)
பொதிகை அலைவ‌ரிசையில் ஒளிபரப்பாகு‌ம் புதுமையான வினா-விடை நிகழ்ச்‌சியான கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சி ஐம்பது வார‌ங்களை‌ எ‌ட்டியு‌ள்ளது.

மாத‌த்‌தி‌ல் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 12.05க்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி நேரடி ஒ‌ளிபர‌ப்பாகு‌ம்.

நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன் துவ‌க்க‌த்‌தி‌ல் கே‌ட்க‌ப்படு‌ம் கே‌ள்‌விகளு‌க்கு நேயர்கள் செ‌ல்பே‌சி கு‌று‌ஞ்செ‌ய்‌தி (எஸ்.எம்.எஸ்.) அல்லது ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் (ஈ-மெ‌யி‌ல்) மூலமாக பதில் அனுப்பலாம்.

இரண்டாவது பகுதியில் தொலைபேசி மூலம் பதில் சொல்பவர்களே, செ‌ல்பே‌சி கு‌று‌ஞ்செ‌ய்‌தி, மி‌ன்ன‌ஞ்ச‌ல் மூலம் பதில் சொன்ன நேயர்களின் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை டாக்டர் சுதா கணேசன், பிரகாசம் ஆக‌ியோ‌ர் தொகுத்து வழங்கு‌கிறார்கள்.

சென்னை தூர்தர்ஷனின் படைப்பான இந்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன்தான் பங்கே‌ற்க வேண்டும். ஏனெ‌னி‌ல் கே‌ட்க‌ப்படு‌ம் கே‌ள்‌விக‌ள் எ‌த்துறையை‌ச் சா‌ர்‌ந்ததாகவு‌ம் இரு‌க்கலா‌ம். எனவே குடும்பத்தினரின் உதவி நிச்சயம் தேவைப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்