‌சி‌ன்ன ‌சி‌ன்ன செ‌ய்‌திக‌ள்

சனி, 28 ஜூன் 2008 (12:28 IST)
சன் டிவி தொடர்களில் அரசி தொடர் முன்னிலையில் இருப்பதை அ‌றி‌ந்து மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் ராதிகா, அர‌சி தொட‌ரி‌ன் யூ‌னி‌ட் ஆ‌ட்களு‌க்கு ஊ‌திய‌த்தை உய‌ர்‌த்‌தி‌க் கொடு‌த்து‌ள்ளா‌ர்.

ச‌ன் டி‌வி‌யி‌ன‌ர் விஜய் நடித்த குருவி படத்தை ‌விலை‌க்கு வா‌ங்‌கி ‌வி‌ட்டா‌ர்க‌ள். ஜி டிவியில் விஜயகாந்த் நடித்த அரசாங்கம் படத்தை அதிக விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.

வெண்ணிற ஆடை மூர்த்தி கனடாவில் இருக்கும் தனது மகன் வீட்டி‌ற்கு போவதால‌், கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வந்த `சிரித்து வாழ்வோம்' காமெடித் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

கலைஞர் டிவிக்காக டைரக்டர் நாகா இயக்கிய பொன்னியின் செல்வன் சரித்திரத் தொடரின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்த தொடரை பிர‌ம்மாண்டமாக எஸ்.எஸ். சக்ரவர்த்தி தயாரிக்கிறார்.

சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கு‌ம் தொகு‌ப்பாள‌ர்க‌ளி‌ல் சேத்தன்-தேவதர்ஷினி தம்பதிகள் முன்னிலையில் இருக்கிறார்கள்.

தெலுங்குப் படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை சீதா, இப்போது பு‌திதாக வரு‌ம் தொட‌ர்களு‌க்கான வா‌ய்‌ப்புகளை த‌வி‌ர்‌த்து வரு‌கிறா‌ர். த‌‌ற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரே தமிழ் சீரியலு‌க்கு‌க் கூட கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு இரு‌க்‌கிறா‌ர் ‌சீதா.

வெப்துனியாவைப் படிக்கவும்