ராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி அலைவரிசையை முதலமைச்சர் கருணாநிதி துவக்கி வைத்துள்ளார்.
இதற்கான விழாவில் ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரன் பேசுகையில், எங்களது இந்த புதிய செய்தி அலைவரிசையில் உலகளாவிய நிகழ்ச்சிகள், பங்குச் சந்தை நிலவரம், வணிகம், தற்போதைய நடப்புகள், உடல்நலம், உணவு, கல்வி, வேலை வாய்ப்பு, சாதனையாளர்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை வழங்குவதோடு மட்டுமில்லாமல், தமிழ் அலைவரிசைகளில் முதல் முறையாக பங்குச் சந்தை நிலவரத்தையும் உடனுக்குடன் வழங்குகிறது ராஜ் தொலைக்காட்சி.
பங்குச் சந்தை இயங்கும் நேரங்களில் வாரந்தோறும் ஹலோ சந்தை மற்றும் சந்தை நேரம் என்ற இரண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.
விரைவில் 24 மணி நேர தெலுங்கு செய்தி அலைவரிசையும் துவங்க உள்ளதாக ரவீந்திரன் கூறினார்.