ஊடகங்களால் கவனிக்கப்படாத தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணிக்கு ஜன்னலுக்கு வெளியே என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.
தமிழ்மொழிக்கும் தமிழர் கலைக்கும் மகுடம் சூட்டும் நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நாளும் நடந்துகொண்டிருக்கிறது.
நூல் வெளியீடுகள், கலை நிகழ்ச்சிகள், கவியரங்கங்கள், மொழி சார்ந்த விவாதங்கள் என்று தமிழ் மணம் வீசும் நிகழ்ச்சி இது. இந்த `ஜன்னலுக்கு வெளியே' நிகழ்ச்சியை பிரசாத் தொகுத்து வழங்குகிறார்.
அரசியல், சினிமாவுக்கு அப்பால் தமிழ் மொழிக்காக தமிழ்நாட்டில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொள்ள முடியும். எபினேசர் இயக்குகிறார்.