தமிழகத்தின் சிறந்த பாடகருக்கான தேடல்

வியாழன், 24 ஏப்ரல் 2008 (12:02 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியரைத் தொட‌ர்ந்து "ஏர்டெல் சூப்பர் சிங்கர் - 2008" தமிழகத்தின் சிறந்த பாடகருக்கான தேடல் மீண்டும் பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது.

2006ல் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகில் மாத்யூ, ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் 'பீமா' திரைப்படத்தில் "என துயிரே" பாடலைப்பாடும் வாய்ப்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஜுனியர் சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, 5 லட்சம் வென்றதோடு பல மேடைகளில் பாடும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

த‌ற்போது துவ‌ங்க உ‌ள்ள "ஏர்டெல் சூப்பர் சிங்கர் - 2008"‌ல் ‌‌நீ‌ங்க‌ள் ப‌ங்கு பெற ‌விரு‌ம்‌புபவ‌ர் 16 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

உடேன நீங்கள் பாடிய பாடலை குறு‌ந்தகடு (CD) அ‌ல்லது ஒ‌லிநாடா‌வி‌ல் (காசட்) பதிவு செய்து, உங்களைப்பற்றிய முழு விவரங்களையு‌ம் தொலைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டு, "EXECUTIVE PRODUCER", ஏர்டேல் சூப்பர் சிங்கர் 2008, த.பெ.எண்: 8484, சென்னை - 600 034 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இது ம‌ட்டும‌ல்லாம‌ல் உங்கள் குரலை முழு விவரங்களோடு ‌விஜ‌ய் டி‌வி‌யி‌ன் இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

நீ‌ங்க‌ள் அனு‌‌ப்பு‌ம் ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ளி‌ன் அடி‌ப்பைட‌யி‌ல் கோவை, திருச்சி மற்றும் சென்னை நகர்களில் மே மாதத்தில் நேர்முகத் தெர்வுகள் நடைபெறவுள்ளது.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008ல் வெற்றி பெரும் அந்த அதிர்ஷ்டசாலிக்கு ஒரு சிறந்த இசையமைப்பாளரின் இசையில் பாடும் வாய்ப்பு கிடைப்பதோடு, தமிழகத்தின் அடுத்த பிரம்மாண்ட குரலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பல பரிசுகளும் அவருக்கு காத்துக் கொண்டிருக்கிறத

வெப்துனியாவைப் படிக்கவும்