தமிழ்நாட்டில் விரைவில் 6 புதிய தனியார் அலைவரிசைகள் துவங்க உள்ளன. சின்னத்திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
தேனாம்பேட்டையில் இயங்கி வந்த சன் டிவி அலுவலகம் தற்போது மந்தைவெளிக்கு மாற உள்ளது.
வரும் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்காக ஸ்ரீ எண்டர்பிரைசஸ் தயாரித்து வழங்கும் தொலைக்காட்சி படம் திருப்பதி லட்டு. இது முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்துக்களின் புனித தலமான காசியின் சிறப்புகள் முழுவதையும் டிஸ்கவரி சேனல் ஒளிபரப்புகிறது.
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மேகலா தொடர் 200வது நாளைக் கடந்துள்ளது.
ஜெயா டிவியில் திருமணமான பெண்களுக்கான என்னோடு பாட்டுப் பாடுங்கள் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.