வா‌னிலை செ‌ய்‌திகளு‌க்கு‌ப் பு‌திய சேன‌ல்!

Webdunia

திங்கள், 3 டிசம்பர் 2007 (17:22 IST)
விளையா‌ட்டு, செ‌ய்‌தி, ‌திரை‌ப்பட‌ங்களு‌க்கு என த‌‌னி‌ப்ப‌ட்ட சேன‌ல்க‌ள் உ‌ள்ளது போல வா‌னிலை செ‌ய்‌திகளை வெ‌ளி‌யிடுவத‌ற்கு பு‌திய சேன‌ல் தொட‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

''அடு‌த்த ஆ‌ண்டு தொட‌ங்க‌ப்படு‌ம் இ‌‌ந்த‌ச் சேன‌ல் முத‌லி‌ல் 6 ம‌ணி நேர‌மு‌ம், 2009 ஆ‌ம் ஆ‌ண்டு 12 ம‌ணி நேரமு‌ம், 2010 முத‌ல் 24 ம‌ணி நேரமு‌ம் ஒ‌ளிபர‌ப்ப‌ப்படு‌ம்'' எ‌ன்று மா‌நில‌ங்களவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு எழு‌த்துபூ‌ர்வமாக ப‌தில‌ளி‌த்த ம‌த்‌திய அ‌றி‌விய‌ல் துறை அமை‌ச்ச‌ர் க‌பி‌ல்‌சிப‌ல் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர்.

நமது நாடு முழுவது‌ம் உ‌ள்ள வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ங்க‌ள் த‌ங்களு‌க்கு‌ள்ளு‌ம், இ‌ந்‌திய வா‌‌னிய‌‌ல் ஆ‌ய்வு மைய‌த்‌தி‌ன் தலைமை அலுவலக‌த்துடனு‌ம் த‌ங்களுடைய எ‌ல்லா தகவ‌ல்களையு‌ம் ப‌ரிமா‌‌றி‌க்கொ‌ள்ளு‌ம் வகை‌யி‌ல் க‌ணி‌னி இணை‌ப்பு உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த இணை‌ப்‌பி‌லிரு‌ந்து பு‌திய சேனலு‌க்கான தகவ‌ல்க‌ள் பெற‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்