பின்னணிப் பாடகர்களில் தனித்தன்மை கொண்டவர் தீபன் சக்கரவர்த்தி. இவர் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். சின்னத்திரை நடிகராக தற்போது தீபன் சக்கரவர்த்தி புது அவதாரம் எடுத்து இருக்கிறார். மேகலா தொடரில் இவருக்கு சங்கராபரணம் புகழ் நடிகை ராஜலட்சுமி ஜோடியாக நடித்து வருகிறார்.
ஆறு மனமே ஆறு தொடரில் நடிகை சீதாவின் கணவராக வருகிறார். முலக்கரை பண்ணையார் படத்தில் கவுரவ வேடம் ஏற்றுள்ள தீபன் சக்கரவர்த்தி, எவ்வளவு டி.வி.தொடர்களில் நடித்தாலும் பின்னணி பாடப்போவதை கைவிட மாட்டாராம்.