சிவாஜி படம்: சரவணன் விளக்கம்

கலைஞர் டி.வி.யில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரஜினி நடித்த சிவாஜி படம் ஒளிபரப்பு ஆகாது என்று ஏ.வி.எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடித்த சிவாஜி படம் ஜூன் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, புதிதாக தொடங்கப்பட உள்ள கலைஞர் டி.வி.யில் சிவாஜி படம் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகின.

இதனை சிவாஜி பட தயாரிப்பாளரான ஏ.வி.எம்.சரவணன் மறுத்துள்ளார். சிவாஜி படத்தின் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் டி.வி.க்கு கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் கலைஞர் டி.வி. ஒளிபரப்பு தொடங்கும் நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிவாஜி படம் ஒளிபரப்பாகும் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் சிவாஜி படம் கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் என்றும் ஏ.வி.எம். சரவணன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்