தரம்சாலா

Webdunia

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:13 IST)
மாநிலம் : ஹிமாச்சல் பிரதேசம்
நகரம் : தரம்சாலா
விமான நிலையம் : குல்லு
தூரம் : நகரத்திலிருந்து 200 கி.மீ.
ரயில் நிலையம் : பட்டான் கோட்
மொழி : பஹாரி, ஹிந்தி

காங்ரா பள்ளத்தாக்கின் முக்கியமான மலைப்பிரதேசமாகும் தரம்சாலா. வளமையான, அலைஅலையான அசைவுகள் கொண்ட இந்த அருமையான பள்ளத்தாக்கு, தௌலாதார் - ஹிவாலிக் மலைகளுக்கு இடைபட்ட பகுதியில் உள்ளது.

தூய்மையான நதிகளையும், தேயிலைத் தோட்டங்களையும், மரம் போன்ற மலைகளையும் உடைய இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் பகுதியாகும் இது.

கீழ் தரம்சாலா ஒரு சுறுசுறுப்பான நகரமாகும். இது 1,250 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு அரசாங்கக் கட்டிடங்கள், கடைவீதி, பேருந்து நிலையம், ஹோட்டல்கள் ஆகியவை இயங்கிக் கொண்டிருக்கும். மேல் தரம்சாலா 1982 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு அற்புதமான கிராமங்கள் உள்ளன.

போக்குவரத்து : டெல்லியிலிருந்து விமானத்தில் செல்பவர்கள் செல்லலாம். அருகில் இருக்கும் விமான நிலையம் கக்லா என்ற விமான நிலையமாகும். இது தரம்சாலாவிலிருந்து 13 கி.மீ. தொலைவிலேயே உள்ளது.

சாலை வழி :

டெல்லி மற்றும் சண்டிகர் நகரங்களிலிருந்து தினசரி பேருந்து மற்றும் டாக்ஸி வசதிகள் உண்டு. தரம்சாலா சண்டிகாரிலிருந்து 252 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ரயில் :

பதான் கோட் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதுதான் வசதியானது.

பார்க்க வேண்டிய இடங்கள் :

மேக்ளியாட்கஞ்ச் : திபெத்தியர்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், நிறைய கடைகள் இருக்கின்றன. இங்கு அருமையான `தரை விரிப்புகள்' கிடைக்கும். கைவினைப் பொருட்களுக்கு பேர்போனது இந்த இடம். அருமையான திபெத்திய உணவு கிடைக்கும்.

தலாய்லாமா இங்குதான் வாழ்கிறார். மிகப்பெரிய புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. திபெத் பண்பாடு பற்றிய ஆராய்ச்சிப் பள்ளி ஒன்றும் இங்கு இருக்கிறது. இதில் பழைய அரிதான ஏடுகள் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

புனிதஜான் சர்ச் : கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட முழுதும் கல்லாலான இந்த சர்ச், லார்ட் எல்கின் நினைவாக கட்டப்பட்டதாகும்.

குனால் பாத்ரி : உள்ளூர் பெண் தெய்வத்தின் மலைக்கோயில் தான் குணால் பாத்ரி, இது கோத்வாலி கடைவீதியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

தால் ஏரி : ஊசியிலைக்காடுகள் சூழ்ந்த மிசாம் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலம் இது.

தங்கும் இடம் : சூர்யா ரிசார்ட் : மேல் தரம்சாலாவின் மிகச்சிறந்த ஹோட்டல் `சூர்யாரிசார்ட்' ஆகும். குளிர்சாதன வசதிகள் கொண்ட அறைகள் உட்பட 40 அறைகள் இங்கு உள்ளன. மிகவும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த ஹோட்டலில், 24 மணி நேர சேவை வசதி உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்