சென்னையைச் சுற்றிப் பார்க்க மகிழ்வுந்து உலா

செவ்வாய், 3 மார்ச் 2009 (16:34 IST)
சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளிக்க மகிழ்வுந்து உலா எனும் புதிய பேருந்து சேவையை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம் கோட்டம்) அறிமுகப்படுத்தியுள்ளது.

இத‌ன் முதற்கட்டமாக குளிர்சாதன வசதியுடன் கூடிய நான்கு சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செ‌ன்னை‌யி‌‌ல் சு‌ற்‌றி‌ப்பா‌ர்‌க்க த‌க்க முக்கிய இடங்க‌ளி‌ல் பேரு‌ந்துக‌‌ள் இய‌க்க‌ப்பட உ‌ள்ளன. அதாவத, சென்னை உயர் நீதிமன்றம், புனித ஜார்ஜ் கோட்டை, மெரீனா கடற்கரை, பார்த்தசாரதி கோயில், சுவாமி விவேகானந்தர் நினைவு இல்லம், சாந்தோம் புனித தேவாலயம், தியோசாபிகல் சொசைட்டி, அஷ்டலட்சுமி கோயில், டைட்டல் பார்க், கிண்டி உயிரியல் பூங்கா, பிர்லா கோளரங்கம், தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், அரசினர் அருங்காட்சியகம், ரிப்பன் மாளிகை ஆ‌கிய‌ப் பகு‌திக‌ளி‌ல் இ‌ந்த பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ப்படு‌ம்.

45 நிமிட இடைவெளியில் ஒரு பேருந்து இயக்கப்பட ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஒவ்வொரு பேருந்தும் குறிப்பிட்ட சுற்றுத் தடத்தில் சீரான இடைவெளி நேரத்தில் இயக்கப்படும். சுற்றுலாப் பயணிகள் பேருந்திலிருந்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ள லாம். இற‌ங்க‌யி இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் சு‌ற்றுலா தல‌ங்களை‌ப் பா‌ர்த்து விட்டு பின்னர் அடு‌த்து வருகின்ற சுற்றுலாப் பேருந்துகளில் ஏறி பயணம் செய்யலாம்.

இத‌ற்கு ஒ‌வ்வொரு முறையு‌ம் க‌ட்டண‌ம் எடு‌க்க வே‌ண்டிய அவ‌சிய‌ம் இ‌ல்லை. ஒரு முறை ம‌ட்டுமே க‌ட்டண‌ம் செலு‌த்‌தி டி‌க்கெ‌‌ட் பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம்.

இ‌ந்த பேரு‌ந்‌தி‌ன் ம‌ற்றொரு மு‌க்‌கிய அ‌ம்ச‌ம் எ‌ன்னவெ‌ன்‌றா‌ல், ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இ‌ந்த பேரு‌ந்து‌க்கான பயணச் சீட்டுகளை மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்து நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு விற்பனை அலுவலகங்களிலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பயணச் சீட்டு விற்பனை அலுவலகங்களிலும் பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்