தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையும், தமிழ்ப் புத்தாண்டும் ஒரு சேர வருவதால், பண்டிகையைக் கொண்டாட தத்தமது ஊர்களுக்கு பயணமாகும் பயணிகளின் வசதிக்காக 80 சிறப்பு பேருந்துகளை இயக்க அரவு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதற்கு முன் ஒரு சில நாட்களாக பேருந்துகளிலும், ரயில்களிலும் கூட்ட நெரிசல் அதிகரிக்கும்.
இதனைத் தவிர்க்க சிறப்புப் பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுவது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டும் பல்வேறு ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ஜனவரி 9ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை திருச்சி, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் பெங்களூருக்கு சென்னையில் இருந்து 80 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த ஊர்களில் இருந்தும் சென்னை திரும்புவதற்காக ஜனவரி 18ம் தேதி 80 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.