மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைவின்றி கொட்டுகிறது.
இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று விடுமுறை தினமானதாலும், சுவாமி ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு வருவதாலும் அதிகமான கூட்டம் காணப்பட்டது.
அதிகமாக இல்லாமலும், சோர்ந்து வடியாமலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மிகவும் ஏற்ற வகையில் குற்றால அருவியில் நீர் வரத்து இருப்பது அங்கு வரும் மக்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.