பழனியில் ரோப்கார் மீண்டும் இயக்கம்

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (15:40 IST)
பழனியில் ஓராண்டிற்குப் பின்னர் ரோப்கார் திட்டம் மீண்டும் இயக்கப்படுகிறது. இயந்திரத்தில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் முறையும் தொடங்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு பழனி அடிவாரம் தெற்கு கிரி வீதியில் இருந்து மலைக்கோயிலுக்கு ரோப் கார் இயக்கம் தொடங்கப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டு ரோப் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருந்து இத்திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் ரூ.1.5 கோடியில் ரோப்கார் இயக்கும் முறை மாற்றியமைக்கப்பட்டது. அதாவது 4 பெட்டிகள் மேலே சென்றால் 4 பெட்டிகள் கீழே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

ரோப் கார் திட்டத்தின் மூலமாக ஒரே மணி நேரத்தில் சுமார் 768 பயணிகள் அடிவாரத்தில் இருந்து பழனி மலையை அடையலாம்.

பழனி மலைக்கு வரும் பக்தர்களுக்கு இது ஒரு புதுவித அனுபவமாகவும் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்