காதல் என்றால் எத்தனையோ விஷயங்கள் நமது நினைவுக்கு வரும். ஆனால் அதில் எல்லாம் தள்ளிவிட்டு முன்னணியில் நிற்பது தாஜ்மகால்.
காதலின் சின்னமான இந்த பளிங்கு கல்லறைக்கு ஈடு இணையாக எதையும் சொல்ல முடியாது. எதுவும் இருக்கவும் முடியாது.
உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் அப்படிப்பட்ட தாஜ்மகால் தற்போது மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது.
தாஜ்மகாலுக்கு அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையாலும், சுற்றுச் சூழல் மாசுபாடுகளாலும் பளிங்கு மாளிகை தற்போது அதன் வெண்மை நிறத்தை இழந்து கொண்டு வருகிறது.
இதை உணர்ந்து, தாஜ்மகாலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. தாஜ்மகாலை தூய்மைப்படுத்தி, அதன் தோட்டங்களை சீரமைத்து மீண்டும் அதன் தனித்தன்மையைக் கொண்டு வருவதற்கான பணிகளில் வேலையாட்கள் ஈடுபட்டுள்ளனர்.
அழகான மேலும் மெருகேற்றப்பட்ட தாஜ்மகாலை விரைவில் காண்போம்.