ர‌யி‌ல் பயண‌ம் : செ‌ல்போ‌‌னி‌ல் உத‌வி

சனி, 19 ஜூலை 2008 (11:40 IST)
ரயில் பயணத்தின்போது ‌திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால், செல்போ‌னி‌ல் தொடர்பு கொண்டால் உடனடி உதவி கிடைக்கும் என ரயில்வே காவல்துறை துணைத் தலைவர் சிவனாண்டி கூறினார்.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார‌த் துவ‌க்க ‌விழா‌வி‌‌ல் பே‌சிய ‌சிவனா‌ண்டி, பயணிகளின் பைகள் காணாமல் போவது, ஜன்னல் ஓரம் தூங்கும் பெண்களின் சங்கிலிகள் பறிக்கப்படுவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன.

ஆ‌ண்டு ஒ‌ன்றுக்கு 1600 பேர் தண்டவாளத்தை கடக்கும்போது உயிரிழக்கின்றனர். இவைகளைத் தடுக்கும் விதத்தில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை குறைக்க பொதுமக்க‌ள் தா‌ன் மு‌ன் வர வேண்டும். அத‌ற்கான ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ‌‌பிர‌ச்சார‌த்தை ர‌யி‌ல்வே‌த் துறை செ‌ய்ய உ‌ள்ளது.

ரயில் பயணத்தின்போது திருட்டு, வேறு பிரச்னைகள், உடல் நலக்குறைவு ஏற்பட்டால் 9962 500500என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டால் ரயில்வே காவல்துறை உடனே உதவிக்கு வரும்.

சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்