உலகின் சிறந்த நாகரீக நகரம்: மும்பைக்கு 22-வது இடம்!
வெள்ளி, 18 ஜூலை 2008 (17:10 IST)
உலகத்தின் சிறந்த நவநாகரீக நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் மும்பை நகரம் 22-வது இடம் வகிக்கிறது. புதுடெல்லி 24-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பிடித்துள்ளது.
நியூயார்க் நகரம் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ரோம், பாரீஸ், மிலன், லண்டன், லாஸ் ஏஞ்ஜெல்ஸ், சிட்னி, லாஸ் வேகாஸ் பெர்லின், டோக்கியோ ஆகிய பிற நகரங்கள் டாப் 10 இடங்களை வகிக்கின்றன.
மும்பை கடந்த ஆண்டு 18-வது இடத்தில் இருந்தது. அது இப்போது 4 இடங்கள் பின்தங்கி 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி முதல் முறையாக டாப்- 25 வது இடத்துக்குள் வந்துள்ளது.
சிட்னி நகரம் 5 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு 7- வது இடத்தைப் பெற்றுள்ளது. துபாய் நகரம் 12 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்டாக்ஹோம், கேப் டவுன் நகரங்களும் டாப்- 25 இடத்துக்கு வந்துள்ளது. முதல்முறையாக இந்த பட்டியலில் இடம் வகித்து வந்த சாவோ போலோ, பாங்காக் நகரங்கள் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெறவில்லை.
தி குளோபல் லாங்வேஜ் மானிடர் என்ற அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் ஆய்வில் இது தெரியவந்துள்ளது.