ரூ.500 கோடியில் 20 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுகிறது!
திங்கள், 21 ஏப்ரல் 2008 (17:02 IST)
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 20 சுற்றுலாத்தலங்கள் ரூ.500 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறினார்.
சுற்றுலா மற்றும் சுற்றுலா இணைப்பு தலங்களை மேம்படுத்த ரூ.25 கோடி முதல் 50 கோடி வரை முதலீடு செய்யப்படும் என்று கூறிய அமைச்சர், சுகாதாரம், ஓட்டல், போக்குவரத்து, விளம்பரம் ஆகியவை இதில் அடங்கும் என்று தெரிவித்தார்.
மேலும், கண்டறியப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்களில் அஜ்மீர், போத் கயா, பதேபூர் சிக்ரி, ஆக்ரா, ஹம்பி, பனாரஸ், டவார்கா, கங்கா கிரிஸ்ட்டேஜ் கோர்ஸ், அவுரங்காபாத், மகாபலிபுரம் ஆகியவை அடங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ரூ.50 கோடி செலவில் ஒரு நிர்வாகத்தின் கீழ் மூன்று சுற்றுலா தலங்கள் உள்ளடக்கப்படும் என்று அமைச்சர் அம்பிகா சோனி கூறினார்.