சென்னை- டெ‌ல்‌லி-ஹரித்துவார் கோடைகால ரயில் சுற்றுலா!

செவ்வாய், 11 மார்ச் 2008 (11:06 IST)
சென்னையில் இருந்து டெ‌ல்‌லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், ஹரித்துவார் ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்க்க சிறப்பு கோடை சுற்றுலா ரயில் சேவையை இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐ.டி.டி.சி.) இயக்குகிறது.

இதுகுறித்து, மத்திய அரசு நிறுவனமான இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்ட மேலாளர் எம்.எஸ். செங்குட்டுவன் கூறுகை‌யி‌ல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு சென்னை- புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் (2621) பயணம் தொடங்கும். சனிக்கிழமை முழுவதும் இனிய ரயில் பயணத்துக்குப் பின் புதுடெல்லி ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இந்த ரயில் சென்று சேரும். இதன்பின் உள்ளூரில் சுற்றிப் பார்த்தபின் புதுதில்லியில் இரவு தங்குதல்.

திங்கள்கிழமை காலையில் ஜெய்ப்பூருக்குப் புறப்படுதல். முக்கிய இடங்களுக்குச் சென்று பார்த்த பின் இரவு ஜெய்ப்பூரில் தங்குதல். இதன்பின் செவ்வாய்க்கிழமை ஆக்ராவுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்த்தல். இரவில் ஆக்ராவில் தங்குதல். புதன்கிழமை காலை சிற்றுண்டிக்குப் பின்னர் புதுடெல்லிக்கு திரும்பி அங்கேயே இரவு தங்குதல்.

புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை காலையில் ஹரித்துவாருக்குச் சென்று, கோயில்கள் உள்ளிட்ட புனித இடங்களுக்குச் தரிசித்தல். இரவில் தங்குதல். இதன்பின் வெள்ளிக்கிழமை காலை உணவு முடித்தபின் ரிஷிகேஷ் சென்று தரிசனம், பிற்பகலில் புதுடெல்லிக்குத் திரும்புதல், இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் (2622) சென்னைக்குப் புறப்படுதல்.

சனிக்கிழமை முழுவதும் இனிய பயணத்துக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேருதல். பயணக் கட்டணம் ரூ. 8,500. இந்த சுற்றுலா பயணத்துக்கு (பெரியவர், சிறியவர் உள்பட) அனைவருக்கும் கட்டணம் தலா ரூ. 8,500 ஆகும்.

மேலும் விவரங்களை அறியவும், முன்பதிவு செய்யவும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஐ.டி.டி.சி. அலுவலகம், 29, டாக்டர் பி.வி. செரியன் கிரசண்ட்-எத்திராஜ் சாலை, எழும்பூர். தொ.பே. எண்கள்: 28257214, 28278884, 28281250, 28274216, 28250534.

வெப்துனியாவைப் படிக்கவும்