வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற் கோயிலுக்கு தினந்தோறும் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை தமிழக சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
வேலூர் அருகே உள்ள ஸ்ரீபுரத்தில் நாராயணி அம்மா வழிபாட்டிற்காக தங்கக்கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆன்மீக ஆர்வலர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வண்ணம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ஒரு நாள் சுற்றுலாவை கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் வார இறுதி நாட்களில் இயக்கி வருகிறது.
இந்த சுற்றுலா காலை 7 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு ரத்தினகிரி முருகன் கோயில், பொற்கோயில் ஆகிய இடங்களில் ஆலய வழிபாட்டினை முடித்து அன்றிரவு 8 மணியளவில் சென்னை வந்து சேரும்.
இதற்கு கட்டணமாக ஒருவருக்கு ரூ.600 (வோல்வோ குளிர் சாதன வசதி) ரூ.550 (குளிர் சாதன வசதி) ரூ.350 (குளிர் சாதன வசதி இல்லாமல்) என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஸ்ரீபுரம் பொற்கோயில் சுற்றுலாவை தினந்தோறும் நடத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் திட்டமிட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி முதல் தினந் தோறும் ஸ்ரீபுரம் பொற்கோயில் சுற்றுலா நடத்தப்பட உள்ளது.