கோடைகாலத்தையொட்டி திருச்சியில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வாரந்திரி அதிவேக விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடைகாலத்தையொட்டி கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தற்கு ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் வாராந்திர அதிகவேக விரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, ஏப்ரல் மாதம் 4, 11, 18, 25, மே 2, 9, 16, 23, ஜுன் 6, 13, 20 ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து சென்டிரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரெயில் (0634) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் இரவு 10.40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு சென்டிரலை வந்தடையும்.
மறுமார்க்கத்தில் சென்டிரலில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மாதங்களில் ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் சிறப்பு ரெயில் (எண் 0633) இயக்கப்படுகிறது. இதன்படி, ஏப்ரல் மாதம் 7, 14, 21, 28 மே 5, 12, 19, 26, ஜுன் 2, 9, 16, 23 ஆகிய நாட்களில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
இந்த ரெயில் கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணத்தில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம்.