27 கோ‌யில்களுக்கு 5 நாட்கள் சுற்றுலா!

Webdunia

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:01 IST)
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் ``27-நட்சத்திர சுற்றுலா'' என்ற பெயரில் நட்சத்திரங்களுக்கு ஏற்ப கோ‌யில்களுக்கு 5 நாட்கள் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இததொட‌ர்பாதமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநர் ராஜாராம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப 27 நட்சத்திர சுற்றுலாவை அறிமுகப்படுத்த உள்ளது. இது 5 நாட்கள் சுற்றுலா ஆகும். நட்சத்திரங்கள் மற்றும் செல்லும் கோவில்களின் விவரம் வருமாறு:-

பூராடம் - திருநாவலூர் குருபகவான், ரேவதி - ஓமாம்புலிïர் சனீஸ்வரர், மகம் - சிதம்பரம் தில்லைக்காளி, ரோகிணி - திருநாகேஸ்வரம் நாகநாதசாமி, அனுஷம் - திருவிடைமருதூர் மூகாம்பிகை, மிருகசிருஷம் - கதிராமங்களம் வனதுர்காதேவி, பூரம் - திருமணஞ்சேரி உத்வாசநாதர், அசுவனி - திருநள்ளாறு சனீஸ்வரர்.

உத்திராடம் - தருமபுரம் தட்சிணாமூர்த்தி, உத்திரட்டாதி - திருவையாறு தட்சிணாமூர்த்தி, கிருத்திகை - நாகப்பட்டினம் நாகநாதர், அஸ்தம், சித்திரை - திருவாரூர் ராஜதுர்கை, திருவாதிரை - திருக்கொள்ளிக்காடு - சனீஸ்வரர், புனர்பூசம் - ஆலங்குடி குருபகவான், சுவாதி - திருவானைக்கால் சனீஸ்வரர், மூலம் - மதுரை மீனாட்சியம்மன், விசாகம் - சோழவந்தான் சனீஸ்வரர்.

ஆயில்யம் - திருப்பரங்குன்றம் சனீஸ்வரர், பூசம் - குச்சனூர் சனீஸ்வரர், கேட்டை - பல்லடம் அங்காளபரமேஸ்வரி, திருவோணம் - தெட்டுப்பட்டி ராஜாகாளியம்மன், உத்திரம் - மூலனூர் வாஞ்சியம்மன், சதயம் - திருச்செங்கோடு சனீஸ்வரர், அவிட்டம் - கொடுமுடி சனீஸ்வரர், பூரட்டாதி - காஞ்சீபுரம் ஆதிசேடன், பரணி - திருவாலங்காடு மகாகாளி.

இந்த சுற்றுலா ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தலங்களாக போற்றப்படும் வழிபாட்டு இடங்களை தரிசனம் செய்துவிட்டு ஞாயிறு மாலை 6 மணி அளவில் சென்னை வந்தடையும். பெரியவர்களுக்கு ரூ.3,800ம், சிறுவர்களுக்கு ரூ.3,200ம் கட்டணம் வசூலிக்கப்படும்.

போக்குவரத்து வசதி, தங்குமிட வசதி, திருக்கோவில் தரிசன வசதி ஆகியவைகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பான முறையில் மேற்கொள்ளும். சுற்றுலாவின் போது இரவு வைத்தீஸ்வரன் கோவில், தஞ்சாவூர், மதுரை, காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

இவ்வாண்டின் முதல் சுற்றுலா நவம்பர் 21-ஆ‌மதேதி சென்னையிலிருந்து தொடங்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள் முன்பதிவுக்கும், மேல் விவரங்களுக்கும் சென்னை கலைவாணர் அரங்கம் அருகில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தை அணுகலாம். தொலைபேசி எண் 25383333, 25384444.

வெப்துனியாவைப் படிக்கவும்