கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுமார் 135 கி.மீ. தூரத்தில் தென்காசியில் உள்ளது குற்றாலம். குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி.
குற்றாலம் அருவியில் குளிப்பது என்பது குதூகலமான ஒன்று என்பதையும் விட, இந்த அருவிக்கு மருத்துவ குணம் இருப்பதும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.
குற்றாலம் பேருந்த நிலையத்தில் இருந்து அருகிலேயே குற்றால அருவி அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஐந்தருவியும், 8 கி.மீ. தூரத்தில் பழைய அருவியும் உள்ளன.
கன்னியாகுமரி சென்று அங்கிருந்து குற்றாலம் செல்வது மிகவும் வசதியானது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அதிக பேருந்துகள் உள்ளன. கன்னியாகுமரியில் இருந்து தென்காசிக்கு சென்று அங்கிருந்து அதிக சிற்றுந்துகள் குற்றாலம் செல்கின்றன. தென்காசி ரயில் நிலையம் சென்று அங்கிருந்து குற்றாலம் செல்லலாம்.
குற்றாலம் செல்ல ஏற்ற நேரம் ஜூன் மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலாகும். இரவு நேரங்கள் மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் அதற்கேற்ற உடைகளை எடுத்துச் செல்வது நல்லது.
குற்றாலம் செல்லும் சுற்றலாப் பயணிகள், சிரிவில்லிபுத்தூர் சென்று அங்கிருக்கும் சுற்றுலாத் தலங்களையும் கண்டு களித்து வரலாம்.