திங்கள், 21 அக்டோபர் 2013 (13:21 IST)
இஷாந்த்: ச்சை! மோசமா பவுலிங் போட்டதுனால என்ன பேச்செல்லாம் வாங்க வேண்டியிருக்கு?
நண்பர்ள்: ஏன் என்ன ஆச்சு!
இஷாந்த்: ஹோட்டல் சர்வர் மாமா 'ஏய் அம்பி இங்க வா, காக்காய்க்கு சாதம் போட்டுட்டு வா- அப்டீன்னு அதட்டறாரு.
-----------
கோச் பிளெச்சர்: அதோ முடியை ஒட்ட வெட்டிக்கிட்டு உயரமா ஒருத்தர் பவுலிங் போடறாரே அவரை வேணா இஷாந்த்துக்கு பதிலா...
தோனி: முடியை ஒட்ட வெட்டிக்கிட்டு வந்தா நாம ஏமாந்துருவோமா? அது இஷாந்த் சர்மாதான் சார்!
---
பிளேயர்: ஏம்பா தோனி, அந்த அடி அடிச்சிருக்கானுங்க, மறுபடியும் இஷாந்த்தை டீம்ல செலெக்ட் பண்றியேப்பா என்ன இது?
தோனி: அங்கதான் நீங்க எதிரணியினரோட சைக்காலஜிய புரிஞ்சுக்கணும், இவ்வளவு நடந்ததுக்கப்புறமும் இஷாந்தை எடுக்கறோம்னா அவர் கிட்ட ஏதோ விஷயம் இருக்குன்னு அவங்க நினைச்சு ஏமாந்து போவாங்க! அதுதான் என்னோட திட்டம்.
பிளெயர் : ஐயோ!! என்று தலையில் அடித்துக் கொண்டு செல்கிறார்.
-------------
இஷாந்த் சர்மா: ஒரு பக்கம் பாத்தா இம்ரான் மாதிரி தெரியறேன், ஒரு பக்கம் பார்த்தா அக்ரம் மாதிரி தெரியறேன்...
தோனி: பவுலிங் போடும்போது மட்டும் முட்டாள் மாதிரி தெரியறயே!
---------------
மேனேஜர்: ஒரு ஓவர்ல 30 ரன் கொடுத்து தோக்கடிச்சியே உனக்கு வெட்கமா இல்லை?
இஷாந்த்: ஓரே ஓவர்ல 30 ரன் அடிச்சு ஜெயிச்சானே அவனுக்கே வெட்கம் இல்லாதபோது எனக்கு எதுக்கு சார் வெட்கம்!
---------------
புவனேஷ் குமார் : அப்பா! நான் இஷாந்த் சர்மாவோட பிராக்டிஸ் செய்யப் போயிட்டு வர்றேன்!
அப்பா: கண்ட கண்ட பசங்களோட சேறாதன்னு நானும் சொல்லிகிட்டேயிருக்கேன் கேக்க மாட்டேங்கற நீ!
-------------
இன்னும் ஒரு பக்கம்தாங்க...
இஷாந்த் சர்மா: என் பந்தை அவங்க அடிச்சு நொறுக்கி ஜெயிச்சதை விட அவங்க செஞ்ச அவமானம்தான் தாங்க முடியலை!
நண்பர்: ஏன் என்ன செஞ்சாங்க?
இஷாந்த்: அவங்க டிரஸ்ஸிங் ரூமுக்கு என்னை கூப்பிட்டு 'அந்த வானத்தப்போல மனம் படச்ச மன்னவனே'ன்னு பாடினாங்க!
----------
செய்தியாளர்கள்: இவ்வளவு தூரம் நீங்க மோசமா பவுலிங் போட்டும் உங்களை டீமை விட்டு தூக்காம வச்சிருக்காங்களே இதப்பத்தி என்ன நினைக்கிறீங்க?
இஷாந்த் சர்மா: பாருங்க அவங்களுக்கே ஜெயிக்கணும்னு அக்கறை இல்லை!