எப்போதும் எதையாவது நெனச்சி கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது சிலரின் வழக்கம். அது அவர்களுக்குப் பழகிப் போய் இருக்கும். ஆனால் இதில் கவலைப்பட என்ன இருக்கிறது என்று நினைப்பது சிலரது வழக்கம்.
இப்போது நாம் கூறப்போவது இந்த இருவருக்குமே பொருந்தும். அதாவது கவலைப்பட எப்போதுமே இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன.
அவை,
ஒன்று நீங்கள் நலமாக இருக்கின்றீர்கள் அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளீர்கள் அவ்வளவுதானே...
இதில் நீங்கள் நலமாக இருந்தால் அதில் கவலைப்பட ஒன்றுமே இல்லையல்லவா அப்புறம் என்ன?
webdunia photo
WD
ஒருவேளை நீங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் அதில், ஒன்று நீங்கள் குணமடைந்துவிடுவீர்கள் அல்லது இறந்துவிடுவீர்கள்.
சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டால் அதற்கு ஏன் கவலைப்பட வேண்டும்.
ஒருவேளை இறந்துவிட்டால்... ஒன்று சொர்கத்திற்குப் போவீர்கள். அல்லது நரகத்திற்குப் போவீர்கள்.
சொர்கத்திற்குப் போனால் சொல்லவே வேண்டாம். ஒரே குஷி தான். அதற்கு நீங்கள் கவலைப்பட போவதில்லை.
ஒரு வேளை நரகத்திற்குப் போனால்...
webdunia photo
WD
அங்குதான் உங்களது ஏராளமான நண்பர்கள் இருப்பார்களே, அவர்களோடு அலவாளவி மகிழவே நேரம் இருக்காது.
அப்புறம் ஏன் கவலைப்பட வேண்டும் கண்டதையும் நினைத்து?????